Saturday, April 27, 2019

27. சிவாஜியுடன் இணைந்த கே.ஆர்.ஜி.

மோகன் நடிப்பில்பயணங்கள் முடிவதில்லை’ என்கிற வெற்றிப் படத்தை கொடுத்த ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் ஒரு படத்தைத் தயாரிக்க விரும்பினார் கே.ஆர்.ஜி. 

‘அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை’ என்கிற பெயரில் உருவான அந்தப் படத்தில் புதுமுகம் கபில்தேவ் நாயகனாக நடிக்க, சிவச்சந்திரன், சுலக்சனா இருவரும் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர். 

என்.கே.விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்ய, கே.வி.மகாதேவன் இசையமைத்திருந்த அந்தப் படம் 1982 ஆம் ஆண்டு வெளியானது.

‘ஒரு தலை ராகம்’, ‘ரயில் பயணங்களில்’ படங்களின் மூலம் தன்னை கவர்ந்த டி.ராஜேந்தர் இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்க விரும்பினார் கே.ஆர்.ஜி. 

‘நெஞ்சில் ஒரு ராகம்’ என்று பெயர் வைக்கப்பட்ட அந்தப் படத்தில் சரிதா முக்கிய வேடத்தில் நடிக்க அவருடன் ராஜீவ், தியாகராஜன் உட்பட பலர் நடித்தனர். 

என்.கே.விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்துள்ள அந்தப் படத்திற்கு பாடல்கள் எழுதி, இசை அமைத்து இயக்கினார் டி.ராஜேந்தர். இந்தப் படம் 1982 ஆம் ஆண்டு வெளியானது.

இந்தப் படங்களைத் தொடர்ந்து மீண்டும் ரஜினி நடிப்பில் ஒரு படத்தை தயாரித்தார் கே.ஆர்.ஜி.

‘துடிக்கும் கரங்கள்’ என்று பெயர் வைக்கப்பட்ட அந்தப் படத்தை ஸ்ரீதர் இயக்கினார். ரஜினியுடன் ராதா, சுஜாதா, ஜெய்சங்கர், ஒய்.ஜி.மகேந்திரன், விஜயகுமார், ‘சில்க்’ ஸ்மிதா உட்பட பலர் நடித்த அந்தப் படத்திற்குப் புலமைபித்தன், கங்கை அமரன் இருவரும் பாடல்கள் எழுதி இருந்தனர். 

பல படங்களில் பாடகராக புகழ் பெற்ற பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இந்தப் படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

1983 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4 ஆம் தேதி வெளியான ‘துடிக்கும் கரங்கள்’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வசூலில் சாதனை படைத்தது.

ரஜினி நடிப்பில் இரண்டு படங்கள், கமல் நடிப்பில் இரண்டு படங்கள் தயாரித்த கே.ஆர்.ஜிக்கு அடுத்து நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடிப்பில் ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்று ஆசை. அந்த ஆசையை இயக்குநர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி நிறைவேற்றி வைத்தார்.

‘திருப்பம்’ என்கிற பெயரில் உருவான அந்தப் படத்தில் சிவாஜி கணேசன் ஜோடியாக சுஜாதா நடித்தார். 

மேலும் ‘இளைய திலகம்’ பிரபு, ஜெய்சங்கர், விஜயகுமார், அம்பிகா, எஸ்.வரலட்சுமி, ஒய்.ஜி.மகேந்திரன், தேங்காய் சீனிவாசன் உட்பட பலர் நடித்த அந்தப் படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.

1983 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் தேதி வெளியான ‘திருப்பம்’ படத்தின் மூலம் கே.ஆர்.ஜியின் மகன் கே.ஆர்.கங்காதரன் தயாரிப்பாளராக அறிமுகமானார்.

ரஜினி நடித்த ‘துடிக்கும் கரங்கள்’ படத்திற்குப் பிறகு மீண்டும் ஸ்ரீதர் இயக்கத்தில் ‘ஆலயதீபம்’ என்கிற படத்தை கே.ஆர்.ஜி. தயாரித்தார்.

கதாநாயகியாக சுஜாதா நடிக்க, ராஜேஷ், சுரேஷ், இளவரசி, ஜெய்சங்கர், வனிதா, மனோரமா, தேங்காய் சீனிவாசன், ஒய்.ஜி.மகேந்திரன், டைப்பிஸ்ட் கோபு உட்பட பலர் நடித்த அந்தப் படத்திற்கு பாஸ்கர் ராவ் ஒளிப்பதிவு செய்ய, எஸ்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார்.

1984 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29 ஆம் தேதி வெளியான ‘ஆலயதீபம்’ படம், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்திற்காக கோயம்புத்தூரில் விழா எடுத்து கலைஞர்களைக் கௌரவித்தார் கே.ஆர்.ஜி. 

‘ஆலயதீபம்’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஸ்ரீதர் இயக்கத்தில் ‘உன்னை தேடி வருவேன்’ என்கிற படத்தை தயாரித்தார் கே.ஆர்.ஜி. கதாநாயகனாக சுரேஷ் நடிக்க, கதாநாயகியாக நளினி நடித்திருந்தார். 

தேங்காய் சீனிவாசன், மனோரமா எனப் பலர் நடித்த அந்தப் படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருந்தார். 1985 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி அந்தப் படம் வெளியானது.

இந்தப் படத்தை தொடர்ந்து மீண்டும் ஆர்.கிருஷணமூர்த்தி இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடித்த ‘நேர்மை’ படத்தைத் தயாரித்தார் கே.ஆர்.ஜி.

திருமுருக கிருபானந்தவாரியார் அவர்களுடன் கே.ஆர்.ஜி. சாந்தா கே.ஆர்.ஜி. 
சிவாஜியுடன் சுஜாதா, பிரபு, ராதிகா, ஜெய்சங்கர், எம்.என்.நம்பியார், ஜெய்சங்கர், தேங்காய் சீனிவாசன், ஒய்.ஜி.மகேந்திரன், மனோரமா, அனுராதா, டைப்பிஸ்ட் கோபு உட்பட பலர் நடித்த அந்தப் படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார்.

‘நேர்மை’ படம் 1985 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் தேதி வெளியானது.

இந்தப் படத்தை தொடர்ந்து சிவாஜி கணேசன் நடிப்பில் ‘தாய்க்கு ஒரு தாலாட்டு’ என்கிற படத்தைத் தயாரித்தார் கே.ஆர்.ஜி. 

மலையாளத்தில் வெளியான ஒரு ‘பைங்கிளி கதா’ படத்தின் தமிழ்ப் பதிப்பாக உருவான இந்தப் படத்தை மலையாளத்தில் இயக்கிய பாலசந்திர மேனன், தமிழிலும் இயக்கினார்.

மலையாளத்தில் வெளியான ஒரு ‘பைங்கிளி கதா’ படத்தின் தமிழ்ப் பதிப்பாக உருவான இந்தப் படத்தை மலையாளத்தில் இயக்கிய பாலசந்திர மேனன், தமிழிலும் இயக்கினார். 

மலையாளத்தில் மது நடித்த பாத்திரத்தில் தமிழில் சிவாஜி கணேசன் நடிக்க, ஸ்ரீவித்யா நடித்த பாத்திரத்தில் பத்மினி நடித்திருந்தார். மலையாளத்தில் மது நடித்த பாத்திரத்தில் தமிழில் சிவாஜி கணேசன் நடிக்க, ஸ்ரீவித்யா நடித்த பாத்திரத்தில் பத்மினி நடித்திருந்தார்

மேலும் விசு, பாண்டியன், பாண்டியராஜன், சுஜாதா, இளவரசி உட்பட பலர் நடிக்க, இளையராஜா இசை அமைத்திருந்தார். 

‘தாய்க்கு ஒரு தாலாட்டு’ படம் 1986 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16 ஆம் தேதி வெளியானது.

‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தைப் பார்த்தது முதல் விசு இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்தார் கே.ஆர்.ஜி. அவர் தயாரித்த ‘தாய்க்கு ஒரு தாலாட்டு’ படத்தில் விசு நடிக்க வந்த போது அதற்கான பேச்சு வார்த்தை நடந்துள்ளது.

கே.பாலசந்தர் நிறுவனத்திற்கு ‘திருமதி ஒரு வெகுமதி’ படம் இயக்கிய பிறகு உங்கள் படத்தை இயக்குகிறேன் என்று தெரிவித்த இயக்குநர் விசு, சொன்ன வார்த்தையை நிருபிக்கும் வகையில் ‘கோவலன் அவன் காவலன்’ என்கிற படத்தை கே.ஆர்.ஜிக்கு இயக்கிக் கொடுத்தார்.

‘கோவலன் அவன் காவலன்’ படத்தில் பிரபு கதாநாயகனாக நடிக்க, அவருடன் ரேகா, மாதுரி, பிரமிளா, கலாரஞ்சனி, ஒருவிரல் கிருஷ்ணா ராவ், லூஸ் மோகன், ஓமக்குச்சி நரசிம்மன், எம்.எஸ்.பாஸ்கர் உட்பட பலர் நடித்திருந்தனர்.
‘கோவலன் அவன் காவலன்’ படத்தில் பிரபு கதாநாயகனாக நடிக்க, அவருடன் ரேகா, மாதுரி, பிரமிளா, கலாரஞ்சனி, ஒருவிரல் கிருஷ்ணா ராவ், லூஸ் மோகன், ஓமக்குச்சி நரசிம்மன், எம்.எஸ்.பாஸ்கர் உட்பட பலர் நடித்திருந்தனர். என்.பாலகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, விஜயானந்த் இசையமைத்திருந்தார்.  

‘கோவலன் அவன் காவலன்’ படம் 1987 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் தேதி வெளியானது.

இந்தப் படத்திற்கு பிறகு மலையாளத்தில் மம்மூட்டி நடிப்பில் ஜோஷி இயக்கிய ‘சங்கம்’ படத்தையும், மோகன்லால் நடிப்பில் கே.மது இயக்கிய ‘அதிபன்’ படத்தையும் தயாரித்த கே.ஆர்.ஜி., மீண்டும் விசு இயக்கத்தில் தமிழில் ‘சகலகலா சம்மந்தி’ என்கிற நகைச்சுவைப் படத்தையும் தயாரித்தார்.

டி.கே.மணியன் அவர்களின் ‘யார் குழந்தை’ என்கிற வானொலி நாடகத்தின் தழுவலாக ‘சகலகலா சம்மந்தி’ படம் உருவானது. இந்தப் படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி, முக்கிய வேடத்திலும் நடித்திருந்தார் விசு.

டெல்லி கணேஷ், மனோரமா, சந்திரசேகர், அருணா, திலீப், மாதுரி, பாண்டியன், ரஞ்சனி, சரண்யா, லட்டு பாப்பா, இளவரசன், குட்டி பத்மினி உட்பட பல நட்சத்திரங்கள் நடித்த அந்தப் படத்திற்கு இதயசந்திரன் பாடல்கள் எழுத சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தார்கள்.

விதவைத் திருமணம் குறித்து விசு ஸ்டைலில் உருவான ‘சகலகலா சம்மந்தி’ படம் 1989 ஆம் ஆண்டு வெளியாகி வசூலிலும் சாதனை படைத்தது. 

இந்தப் படம் தயாரிப்பில் இருந்த போது மலையாளத்திலும் கே.ஆர்.ஜி. தீவிரமாகக் கவனம் செலுத்தினார்.

ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் ஸ்ரீநிவாசன், பார்வதி நடித்த ‘வடக்கு நோக்கி எந்திரம்’ படத்தையும், அசோகன் இயக்கத்தில் ஜெயராம், சுரேஷ் கோபி நடித்த ‘வர்ணம்’ படத்தையும் வாங்கி வெளியிட்ட கே.ஆர்.ஜி., சத்தியன் அந்திக்காடு இயக்கத்தில் மோகன்லால், ரேவதி, சீனிவாசன், முரளி, இன்னசென்ட், திலகன் உட்பட பலர் நடித்த ‘வரவேல்பு’ என்கிற படத்தையும் தயாரித்தார். 1989 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதி ‘வரவேல்பு’ படம் வெளியானது.


ஆனந்த் பாபு, சீதா, ஊர்வசி, விசு, கமலாகாமேஷ் நடிப்பில் டி.பி.கஜேந்திரன் இயக்கத்தில் பெண்கள் வீட்டின் கண்கள் என்கிற படத்தை தயாரித்தார் கே.ஆர்.ஜி. 

1990 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் தேதி வெளியான அந்தப் படத்திற்கு சங்கர் - கணேஷ் இசையமைத்திருந்தனர். 

ரகுமான், ராதா, சித்தாரா உட்பட பலர் நடித்த மனைவி வந்த நேரம்’ தமிழ்ப் படத்தைத் தயாரித்தார் கே.ஆர்.ஜி. 

காரைக்குடி நாராயணன் இயக்கிய அந்தப் படத்திற்கு சந்திரபோஸ் இசை அமைத்திருந்தார். 1990 ஆம் ஆண்டு ஜூன் 22 ஆம் தேதி அந்தப் படம் வெளியானது.

ரகுமான், ராதா, சித்தாரா உட்பட பலர் நடித்த மனைவி வந்த நேரம்தமிழ்ப் படத்தைத் தயாரித்தார் கே.ஆர்.ஜி. காரைக்குடி நாராயணன் இயக்கிய அந்தப் படத்திற்கு சந்திரபோஸ் இசை அமைத்திருந்தார். 1990 ஆம் ஆண்டு ஜூன் 22 ஆம் தேதி அந்தப் படம் வெளியானது.

No comments:

Post a Comment