Saturday, April 27, 2019

31. கே.ஆர்.ஜியின் மறைவு.


2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு திடீரென கே.ஆர்.ஜி. அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். ஆனால், அவரது உடலில் இருந்து அவர் உயிர் பிரிந்ததை யாராலும் தடுக்க முடியவில்லை.

மறுநாள் புதன்கிழமை காலை தி.நகர் பாகீரதி அம்மாள் தெருவில் உள்ள அவரது அலுவலகத்தில் கே.ஆர்.ஜி. அவர்களின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், சூர்யா, உதயநிதி, கவுண்டமணி, இயக்குநர்கள் கே.பாலசந்தர், பாரதிராஜா, ஆர்.சுந்தர்ராஜன், இசையமைப்பாளர் இளையராஜா, அபிராமி ராமநாதன், தயாரிப்பாளர்கள் ஏவி.எம்.சரவணன், கலைப்புலி தாணு, கோவை தம்பி, எஸ்.ஏ.சந்திரசேகரன், இப்ராஹிம் ராவுத்தர், பிரமிட் நடராஜன், மோகன் நடராஜன், பி.எல்.தேனப்பன், கமீலா நாசர், கே.ராஜன் என ஏராளமான தயாரிப்பாளர்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

அவரது இறுதிச் சடங்கு அன்று மாலை கண்ணம்மாப்பேட்டை மின் மயானத்தில் நடைபெற்றது.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் அதிக உறுப்பினர்களைச் சேர்த்தவர்....

தயாரிப்பாளர்களிடத்தில் ஒற்றுமையை உருவாக்கியவர்.....

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திலும் படத்தின் பெயர் பதிவு செய்தால் தணிக்கை அலுவலகத்திற்குச் செல்லலாம் என்கிற நிலையைக் கொண்டு வந்தவர்.....

விநியோகஸ்தர் சங்கங்களுக்குச் சென்று தயாரிப்பாளர்  நிற்பதற்குப் பதிலாக தயாரிப்பாளர் சங்கம் மூலமே பிரச்சினைக்குத் தீர்வு கண்டவர்...

நடிகர், நடிகைகளின் பிரச்சினை குறித்து சுமுகமாகப் பேசி படப்பிடிப்பு நடத்த பல தயாரிப்பாளர்களுக்கு உதவியாக இருந்தவர்....

கட்டணம் கொடுத்துப் பாடல் ஒளிபரப்பியத்தை மாற்றி பாடல்கள் மூலம் தயாரிப்பாளர்களுக்குப் பணம் வாங்கிக் கொடுத்தவர்...

சிறு படத் தயாரிப்பாளர்களின் கஷ்டத்தை குறைக்கும் வகையில் முழுப் பக்க விளம்பரத்திற்குப் பதிலாக கால் பக்க விளம்பரம் கொடுக்க வழிவகுத்தவர்....

நலிந்த தயாரிப்பாளர்களுக்கு உதவ தயாரிப்பாளர் சங்க அறக்கட்டளையை தொடங்கியவர்.....

தயாரிப்பாளர்களின் பாதுகாப்புக்காக இன்சூரன்ஸ் காப்பீடு செய்து கொடுக்க வழி வகை செய்தவர்...

திருட்டு விசிடி தயாரிப்பவர்களை ஒடுக்க அரசு மூலம் குண்டர் சட்டம் இயற்றத் திரையுலகைத் திரட்டி போராடியவர்....

இரண்டு லட்ச மானித் தொகையை ஐந்து லட்சமாக உயர்த்திக் கொடுக்க முயற்சி எடுத்தவர்...

தமிழ்த் திரையுலகிற்குப் பெருமை சேர்த்தவர்களைப் பாராட்டிப் பெரும் விழா எடுத்துக் கௌரவித்தவர்.....

படத் தயாரிப்புச் செலவுகளைக் கட்டுப்படுத்தப் பல முயற்சிகள் மேற்கண்டவர்....

இத்தனைப் பெருமைகளுக்கும் உரித்தானவர் யார் என்றால் அவர்தான் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருந்த கே.ஆர்.ஜி. என்று அன்போடு அழைக்கப்பட்ட கே.ராஜகோபால் அவர்கள்.
தயாரிப்பாளர் சங்கத்தில் சிங்கமாக கர்ச்சித்த இமயம்!!!

அன்பிற்கு இலக்கணம்!!!

ஆற்றலின் பிறப்பிடம்!!!

தயாரிப்பாளர்களின் நாயகன் !!!

சமாதானப்புறா!!!

சிலர் மறைந்தால் அந்த குடும்பத்திற்கு மட்டுமே இழப்பாகும்!!!

கே.ஆர்.ஜி.யின் மறைவு இந்தத் திரையுலகிற்கே பேரிழப்பு!!!

இந்த பூ உலகம் உள்ளவரை அவர் புகழ் நிலைத்திருக்கும்!!!

கே.ஆர்.ஜி. புகழ் ஓங்குக!!!



K.R.G. படங்களின் பட்டியல்


Year
Film
Language
1975
Tamil
1975
1976
Janaki SabathamAthirshtam Azhaikkirathu
TamilTamil
1978
 Vamsha Jyothi   
Kannada
1978
Tamil
1980
Tamil
1981
Kadal Meengal    
Tamil
1982
Tamil
1982 
Nenjil Oru Raagam
Tamil
1983
Tamil
1984
Tamil
1984
Alaya Deepam    
Tamil
1984
Unnai Thedi Varuven
Tamil
1985
Tamil
1986
Tamil
1987
Tamil
1988
Malayalam
1989
Malayalam
1989
Tamil
1989
Malayalam
1989
Malayalam
1989
Malayalam
1989
Mrugaya
Malayalam
1990 
Manaivi Vantha Neram
Tamil
1990
1990
Pengal Veettin Kangal
Midhya
Tamil
Malayalam
1990
Malayalam
1990 
Malayalam
1991
Malayalam
1992
Malayalam
1993
Tamil
1999
Minsara Kanna    
Tamil
2000
Tamil
2000
Tamil
2001
Tamil
2001
Tamil
2005
Mayookham 
Malayalam
2009
Guru En Aalu    
Tamil





No comments:

Post a Comment