Saturday, April 27, 2019

28. மலையாளத்திலும் கவனம் செலுத்திய கே.ஆர்.ஜி.


மம்மூடியுடன் கே.ஆர்.ஜி. 
மலையாளத்தில் மம்மூட்டி நடிப்பில் ஜோஷி இயக்கிய ‘சங்கம்’, மோகன்லால் நடிப்பில் கே.மது இயக்கிய ‘அதிபன்’ ஆகிய படங்களுக்கு கிடைத்த வரவேற்பைக் கண்டு மீண்டும் மம்மூட்டி, மோகன்லால் நடிக்கும் படங்களைத் தயாரித்தார் கே.ஆர்.ஜி.

லோகிததாஸ் கதை வசனத்தில் ஐ.வி.சசி இயக்கிய ம்ருகயா என்கிற படத்த் தயாரித்தார் கே.ஆர்.ஜி. மம்மூட்டி கதாநாயகனாக நடிக்க அவருடன் சுனிதா, திலகன், ஊர்வசி, ஜெகதி ஸ்ரீகுமார், லாலு அலெக்ஸ் உட்பட பலர் நடித்த அந்தப் படத்திற்கு ஜெயராம் ஒளிப்பதிவு செய்ய, சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தார்.

1989 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி வெளியான அந்தப் படம் வசூலில் சாதனைப்படைத்ததுடன் கதாநாயகன் மம்மூட்டிக்கு சிறந்த நடிகர், இயக்குநர் ஐ.வி.சசிக்கு சிறந்த இயக்குநர் விருது என இரு கேரளா அரசின் விருதுகளை பெற்று தந்தது.

டி.ஹரிகரன் இயக்கத்தில் மம்மூட்டி, ரேகா, திலகன், காவியூர் பொன்னம்மா, ராஜன் பி.தேவ், சுகுமாரன் உட்பட பலர் நடித்த ‘ஒளியம்புகள்’ படம் 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளியானது. இந்தப் படத்திற்கு ஓ.என்.வி. குருப் பாடல்கள் எழுத எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.

வேணு நாகவல்லி இயக்கத்தில் மோகன்லால், முரளி, கீதா, ஊர்வசி, ரேகா, மது, ஜெகதி ஸ்ரீகுமார், நெடுமுடி வேணு, வினித் உட்பட பலர் நடித்த ‘லால் சலாம்’ என்கிற அரசியல் படத்தை தயாரித்தார் கே.ஆர்.ஜி. இந்தப் படம் 1990 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி வெளியானது. இந்தப் படத்திற்கு கே.பி.நம்பியாத்ரி ஒளிப்பதிவு செய்ய, ரவீந்திரன் இசையமைத்திருந்தார்.

.வி.சசி இயக்கத்தில் மம்மூட்டி, சுரேஷ்கோபி, ரூபிணி ஆகியோர் நடித்தமித்யாமலையாள படத்தை வாங்கி வெளியிட்ட கே.ஆர்.ஜி., இரண்டாவது முறையாக மம்மூட்டி நடிப்பில் .வி.சசி இயக்கியநீலகிரிபடத்தைத் தயாரித்தார். ‘நீலகிரிபடத்தில் மம்மூட்டியுடன் மதுபாலா, சுனிதா, ரகு, அஞ்சு, எம்.ஜி.சோமன், ஸ்ரீவித்யா, சங்கீதா, சாநவாஸ் உட்பட பலர் நடித்திருந்தனர். 1991 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி வெளியான இந்தப் படத்திற்கு ராமச்சந்திர பாபு ஒளிப்பதிவு செய்ய, மரகதமணி இசையமைத்திருந்தார். 

தமிழ்ப் படங்களைத் தொடர்ந்து மலையாளத்திலும் தொடர்ந்து வெற்றிப் படங்களைத் தயாரித்தார் கே.ஆர்.ஜி. இதற்காக கேரளாவில் பல முக்கிய நகரங்களில் பட வெளியீட்டுக்கான அலுவலகங்கள் திறந்திருந்தார்.

தமிழில் மீண்டும் படங்கள் தயாரிக்க விரும்பிய கே.ஆர்.ஜி., சரத்குமார் நடிப்பில் சசிமோகன் இயக்கிய ‘சிவந்தமலர் என்ற படத்தை தயாரித்தார். சரத்குமார் ஜோடியாக கவுதமி நடிக்க, மேலும் விஜயகுமார், ஸ்ரீவித்யா, கவுண்டமணி, செந்தில், டெல்லி கணேஷ் உட்பட பலர் நடித்த அந்தப் படத்திற்கு மரகத மணி இசையமைத்திருந்தார். 1992 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் தேதி வெளியான அந்தப் படம் எதிர்ப் பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.

‘நான் புடிச்ச மாப்பிள்ளை’, ‘பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்’, ‘பொறந்த வீடா புகுந்த வீடா’ எனத் தொடர்ந்து குடும்பப் படங்களை கொடுத்து வெற்றிப் பட இயக்குநராக புகழ் பெற்ற வி.சேகர் இயக்கத்தில் ஒரு படம் தயாரிக்க விரும்பினார் கே.ஆர்.ஜி.

‘பார்வதி என்னை’ப் பாரடி என்று பெயர் வைக்கப்பட்ட அந்தப் படத்தில் சரவணன், பார்வதி, ஜனகராஜ், விஜயகுமார், ஸ்ரீவித்யா, லலிதகுமாரி, சார்லி, வாசு விக்ரம் உட்பட பலர் நடித்தனர். கவிஞர் வாலி, கங்கை அமரன், பிறைசூடன் ஆகியோர் பாடல்கள் எழுத இளையராஜா இசை அமைத்திருந்தார். 1993 ஆம் ஆண்டு மார்ச் ஜூலை 23 ஆம் தேதி வெளியான இந்தப் படமும் எதிர்ப் பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.

தமிழ்ப்பட தயாரிப்பாளர் சங்கம் வேண்டும் என்ற எம்.ஜி.ஆருடன் கே.ஆர்.ஜி. 
இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு தேர்தல் குறித்து சிந்திக்க ஆரம்பித்தார். தமிழ்ப் பட தயாரிப்பாளர்களுக்குத் தொழில் பாதுகாப்பு வேண்டும். அதற்காகத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தை வலிமையுள்ள சங்கமாக மாற்ற வேண்டும் என்று கனவு கண்டார்.

அரசியலிலும், திரையுலகிலும் தனது குருவாக எண்ணிய கோவைச் செழியன் அவர்களை எதிர்த்து தேர்தலில் நிற்பது என்று முடிவு செய்தார்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் என்கிற அமைப்பை உருவாக்க வேண்டும் என்று முதல்வர் எம்.ஜி.ஆர். விரும்பினார். அதற்காகப் பல தயாரிப்பாளர்களிடம் தனது எண்ணத்தைத் தெரிவித்தார். அப்படி அவர் விதைத்த கருத்தால் உருவானதுதான், ‘தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம்’.

தயாரிப்பாளர்கள் வலம்புரி சோமநாதன், இராம.அரங்கனல், ‘தேவி பிலிம்ஸ்’ ராஜகோபால் செட்டியார், ஏவி.எம்.முருகன், ‘கலா கேந்திரா’ கோவிந்தராசன், ‘சித்ரமஹால்’ கிருஷ்ணமூர்த்தி, ‘முக்தா’ வி.சீனிவாசன் ஆகிய ஏழு பேரும் சேர்ந்து கையெழுத்திட்டு உருவாக்கிய அமைப்புதான் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம்’.

இந்த சங்கத்திற்கான சட்ட விதிகளை வகுத்துக் கொடுத்தவர் முன்னாள் சட்ட அமைச்சர் கா.பட்டாபிராமன்.

18.07.1979 அன்று தொடங்கப்பட்ட இந்த சங்கத்திற்கு முக்தா வி.சீனிவாசன் தலைவராக முதலில் பதவி வகித்தார். அதன் பிறகு வலம்புரி சோமநாதன், சித்ரமஹால் கிருஷ்ணமூர்த்தி, பி.எஸ்.வீரப்பா, பாரதிராஜா, பேராசிரியர் ஏ.எஸ்.பிரகாசம், கோவைச்செழியன் ஆகியோர் தலைவர்களாக பதவியில் இருந்தனர்.

தன்னை எதிர்த்து போட்டியிட்ட பட அதிபர் ஜிவியுடன் கே.ஆர்.ஜி.
அதன் பிறகு நடைபெற்ற தேர்தலில் கே.ஆர்.ஜி. அவர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுத் தலைவர் பதவிக்கு வந்தார். தொடர்ந்து மூன்று முறை தலைவராக வெற்றி பெற்ற கே.ஆர்.ஜி. அதன் பிறகு அ.செ.இப்ராஹிம் ராவுத்தர் அவர்களைத் தலைவர் பதவிக்கு நிற்க வைத்து அவர் வெற்றிபெற உதவியாக இருந்தார்.

ஆறு ஆண்டுகள் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க வளர்ச்சியிலும், முன்னேற்றத்திலும் முழுமையாகக் கவனம் செலுத்திய கே.ஆர்.ஜி. அதன் பிறகு தயாரிப்பு நிறுவனம் பக்கம் கவனம் செலுத்தினார். அதற்குக் காரணமாக இருந்தவர், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன்.

“அண்ணே... நீங்களும் விஜய் நடிப்பில் ஒரு படம் தயாரிங்க...... கால்ஷீட் தருகிறேன்” என்று உரிமையோடு கே.ஆர்.ஜி. அவர்களிடம் எஸ்.ஏ.சந்திரசேகரன் தெரிவித்தார்.  

விஜய் படம், கே.எஸ்.ரவிகுமார் இயக்கம் என்றதும் சத்தியரங்கையா நிதி உதவி செய்ய முன் வந்தார். ‘ன்சார கண்ணா என்கிற பெயரில் உருவான அந்தப் படம் 1999 ஆம் ஆண்டு வெளியானது. அதன் பிறகு அர்ஜுன் நடிப்பில் ராஜ்கபூர் இயக்கிய ‘சுதந்திரம், டி.பி.கஜேந்திரன் இயக்கத்தில் பிரபு நடித்த ‘பட்ஜெட் பத்மநாபன், ‘மிடில்கிளாஸ் மாதவன் ஆகிய படங்களை தயாரித்தார் கே.ஆர்.ஜி.


No comments:

Post a Comment